அன்லிமிடேட் பிரியாணி தரும் புதிய பிரியாணி அரிசி
பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை நாள்தோறும் பெருகி கொண்டே தான் வருகிறது... கைதி படத்தில் கார்த்தி பிரியாணி சாப்பிடற அழகை திரும்ப திரும்ப ஓடவிட்டு ரசிக்கறவங்க நிறைய பேர் இருக்காங்க

நிறைய பிரியாணி தரும் புதிய அரிசி
பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை நாள்தோறும் பெருகி கொண்டே தான் வருகிறது... கைதி படத்தில் கார்த்தி பிரியாணி சாப்பிடற அழகை திரும்ப திரும்ப ஓடவிட்டு ரசிக்கறவங்க நிறைய பேர் இருக்காங்க... அது மாதிரி அன்லிமிடெட் பிரியாணி பிரியர்களுக்கு எவ்வளவு பிரியாணி சாப்பிட்டாலும் அவ்வளவு எளிதில் வயிறு நிரம்பி விடாது... அத்தகைய பிரியாணி பிரியர்களுக்காக தமிழ்நாடு வேளாண் பல்கலை VGD1 எனும் புதிய சீரக சம்பா அரிசி ரகத்தை அறிமுக படுத்தி இருக்கிறது. இது சமைக்கப்படும் போது வழக்கமான சீரக சம்பாவை விட கூடுதல் அளவு சாதம் தருகிறது... வழக்கமா ஒரு கிலோ சீரக சம்பா பொங்கினால் மூன்றரை கிலோ சாதம் வருவது, இந்த புதிய ரகத்தில் கூடுதலாக ஒன்றரை கிலோ வரை சாதம் கிடைக்கிறது... ஏற்கனவே சில பிரபல பிரியாணி உணவகங்கள் இதை பயன்படுத்தி பார்த்து விட்டு இது தரும் கூடுதல் அளவு, சுவை பற்றி மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்கள்...
அதனால் பிரியாணி பிரியர்களுக்கும், உணவகங்களுக்கும் மகிழ்ச்சி செய்தியாக வந்திருக்கிறது VGD1 சீரக சம்பா அரிசி. வைகை நதி டேம் பகுதியில் உள்ள அரிசி ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்ட நெல் என்பதால் அந்த வைகை டேம் பெயரே இந்த புதிய பிரியாணி அரிசிக்கு சூட்டப்பட்டிருக்கிறது.