எப்போது படப்பிடிப்பு தொடங்கும்? காத்திருக்கும் துருவ் விக்ரம்

எத்தனை நாளைக்குத்தான் வீட்டிற்குள்ளேயே அடைந்துகிடக்க முடியும். எப்படா இந்த ஊரடங்கு முடியும் என்று திரையுலகினர் காத்திருக்கிறார்கள். அதில் ஒருவராக இருக்கிறார் துருவ் விக்ரம். தன் முதல் படமான ஆதித்ய வர்மா படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, "ஞாயிற்றுக்கிழமைகளில் படப்பிடிப்புக்காக காலை ஆறு மணிக்கு எழுந்த நேரங்களை இழந்துவருகிறேன். மீண்டும் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்ல காத்திருக்கிறேன். ரீடேக்ஸ் எடுப்பதற்காகவும் காத்திருக்கிறேன்" என்று சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கில் துருவ் விக்ரம் நடித்தார். அதுவொரு மனசை உருக்கும் காதல் கதையாக உருவாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படப்பிடிப்பு நாட்களை துருவ் மறக்காமல் இருக்கிறார். இந்த ஊரடங்கு காலத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுவரும் அவர், தொடர்ந்து சமூக வலைதளங்களில் தன் ஃபிட்னஸ் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் கேங்ஸ்டர் படத்தில் மகன் துருவ்வுடன் முதன்முறையாக நடிக்கிறார் சீயான் விக்ரம். அதற்காக இருவரும் உடலை உருக்கி எஃகு போல வைத்துள்ளார்கள்.  

எப்போது படப்பிடிப்பு தொடங்கும்?  காத்திருக்கும் துருவ் விக்ரம்

எத்தனை நாளைக்குத்தான் வீட்டிற்குள்ளேயே அடைந்துகிடக்க முடியும். எப்படா இந்த ஊரடங்கு முடியும் என்று திரையுலகினர் காத்திருக்கிறார்கள். அதில் ஒருவராக இருக்கிறார் துருவ் விக்ரம். தன் முதல் படமான ஆதித்ய வர்மா படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, "ஞாயிற்றுக்கிழமைகளில் படப்பிடிப்புக்காக காலை ஆறு மணிக்கு எழுந்த நேரங்களை இழந்துவருகிறேன். மீண்டும் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்ல காத்திருக்கிறேன். ரீடேக்ஸ் எடுப்பதற்காகவும் காத்திருக்கிறேன்" என்று சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

image

தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கில் துருவ் விக்ரம் நடித்தார். அதுவொரு மனசை உருக்கும் காதல் கதையாக உருவாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படப்பிடிப்பு நாட்களை துருவ் மறக்காமல் இருக்கிறார். இந்த ஊரடங்கு காலத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுவரும் அவர், தொடர்ந்து சமூக வலைதளங்களில் தன் ஃபிட்னஸ் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் கேங்ஸ்டர் படத்தில் மகன் துருவ்வுடன் முதன்முறையாக நடிக்கிறார் சீயான் விக்ரம். அதற்காக இருவரும் உடலை உருக்கி எஃகு போல வைத்துள்ளார்கள்.