“மயானத்திற்கு செல்ல பாதை இல்லை” - தாயின் உடலை வீட்டின்முன் புதைக்க முயன்ற மகன்

புதுக்கோட்டை அருகே மயானத்திற்கு செல்ல பாதை இல்லை எனக்கூறி உயிரிழந்த தாயின் உடலை மகன் ஒருவர் வீட்டின் முன்பு அடக்கம் செய்ய முயன்ற சம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகுரு. இவரின் தாயார் செல்லாயி(70) நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்ல முறையான பாதை வசதி இல்லை எனக்கூறி ராஜகுரு மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்த மூதாட்டியின் சடலத்தை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லாமல் தனது வீட்டின் முன்பு குழிவெட்டி அடக்கம் செய்ய முயன்றனர். மேலும், ஏற்கனவே மயானத்திற்கு செல்ல இருந்த பாதையை கணேசன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி விட்டதாகவும் அதனை அப்புறப்படுத்தி நிரந்தர பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி வட்டாட்சியர் கலைமணி மற்றும் டிஎஸ்பி முத்துராஜ் தலைமையிலான அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ராஜகுரு மற்றும் எதிர்தரப்பை சேர்ந்த கணேசன் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தற்போது வழக்கமான பாதையில் செல்லாயியின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்யுமாறும் பின்பு முறையான ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்றி நிரந்தர பாதை அமைத்துத் தர நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். இதனை ஏற்ற செல்லாயி குடும்பத்தினர் தற்காலிகமாக பயன்படுத்தப்படும் பாதையில் எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.

“மயானத்திற்கு செல்ல பாதை இல்லை” - தாயின் உடலை வீட்டின்முன் புதைக்க முயன்ற மகன்

புதுக்கோட்டை அருகே மயானத்திற்கு செல்ல பாதை இல்லை எனக்கூறி உயிரிழந்த தாயின் உடலை மகன் ஒருவர் வீட்டின் முன்பு அடக்கம் செய்ய முயன்ற சம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகுரு. இவரின் தாயார் செல்லாயி(70) நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்ல முறையான பாதை வசதி இல்லை எனக்கூறி ராஜகுரு மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்த மூதாட்டியின் சடலத்தை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லாமல் தனது வீட்டின் முன்பு குழிவெட்டி அடக்கம் செய்ய முயன்றனர்.

image

மேலும், ஏற்கனவே மயானத்திற்கு செல்ல இருந்த பாதையை கணேசன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி விட்டதாகவும் அதனை அப்புறப்படுத்தி நிரந்தர பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி வட்டாட்சியர் கலைமணி மற்றும் டிஎஸ்பி முத்துராஜ் தலைமையிலான அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ராஜகுரு மற்றும் எதிர்தரப்பை சேர்ந்த கணேசன் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

image

இதனையடுத்து தற்போது வழக்கமான பாதையில் செல்லாயியின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்யுமாறும் பின்பு முறையான ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்றி நிரந்தர பாதை அமைத்துத் தர நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். இதனை ஏற்ற செல்லாயி குடும்பத்தினர் தற்காலிகமாக பயன்படுத்தப்படும் பாதையில் எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.