பிரபு சாலமன் இயக்கத்தில் ’குக் வித் கோமாளி’ அஸ்வின்?

பிரபு சாலமன் இயக்கத்தில் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் அஸ்வின் மற்றும் புகழ் ஆகியோர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றனர். இவர்கள் இருவரை கொண்டு ரவீந்திரன் என்பவர் 'என்ன சொல்லப் போகிறாய்' என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கும் அந்தப் படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், நடிகர் அஸ்வின் பிரபு சாலமன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபு சாலமன் இயக்கத்தில் விரைவில் ‘கும்கி 2’ வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபு சாலமன் இயக்கத்தில் ’குக் வித் கோமாளி’ அஸ்வின்?
Web Designing Company in Coimbatore - Creativepoint

பிரபு சாலமன் இயக்கத்தில் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் அஸ்வின் மற்றும் புகழ் ஆகியோர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றனர். இவர்கள் இருவரை கொண்டு ரவீந்திரன் என்பவர் 'என்ன சொல்லப் போகிறாய்' என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கும் அந்தப் படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், நடிகர் அஸ்வின் பிரபு சாலமன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபு சாலமன் இயக்கத்தில் விரைவில் ‘கும்கி 2’ வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.