செப்டம்பர் 24-ல் வெளியாகும் யோகி பாபுவின் ‘பேய் மாமா’

நடிகர் யோகி பாபுவின் ‘பேய் மாமா’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. ‘பீஸ்ட்’, ‘வலிமை’ என முன்னணி நடிகர் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவரும் யோகி பாபு ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நாயகனாக அவர் நடித்த ‘மண்டேலா’ சூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில், யோகி பாபு நாயகனாக நடித்துள்ள ‘பேய் மாமா’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. பிரபல இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார். இதில், யோகி பாபுவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மாளவிகா மேனன் நடித்துள்ளார். யோகி பாபுவுடன் எம்.எஸ் பாஸ்கர், மொட்ட ராஜேந்திரன்,லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில், நீண்ட நாட்களாக வெளியீட்டுக்குத் தயாராய் இருக்கும் ‘பேய் மாமா’ படம் வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

செப்டம்பர் 24-ல் வெளியாகும் யோகி பாபுவின் ‘பேய் மாமா’
Web Designing Company in Coimbatore - Creativepoint


நடிகர் யோகி பாபுவின் ‘பேய் மாமா’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

‘பீஸ்ட்’, ‘வலிமை’ என முன்னணி நடிகர் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவரும் யோகி பாபு ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நாயகனாக அவர் நடித்த ‘மண்டேலா’ சூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில், யோகி பாபு நாயகனாக நடித்துள்ள ‘பேய் மாமா’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. பிரபல இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார். இதில், யோகி பாபுவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மாளவிகா மேனன் நடித்துள்ளார்.

image

யோகி பாபுவுடன் எம்.எஸ் பாஸ்கர், மொட்ட ராஜேந்திரன்,லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில், நீண்ட நாட்களாக வெளியீட்டுக்குத் தயாராய் இருக்கும் ‘பேய் மாமா’ படம் வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு அறிவித்திருக்கிறது.