ஜிம் லேகர் -கும்ப்ளே -அஜாஸ் படேல் : ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அரிய சாதனை படைத்துள்ளார் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல். அதுவும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.  மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால், கில், புஜாரா, கோலி, ஷ்ரேயஸ், சாஹா, அஸ்வின், அக்சர், ஜெயந்த் யாதவ், சிராஜ் என பத்து பேட்ஸ்மேன்களை அவுட் செய்துள்ளார்.  47.5 ஓவர்கள் வீசி 119 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். இதில் 12 மெய்டன் ஓவர்கள் அடங்கும்.  >ஜிம் லேகர் : இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ஜிம் லேகர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த 1956-இல் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 51.2 ஓவர்கள் வீசி 53 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார்.  >அனில் கும்ப்ளே : பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த 1999-இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் அனில் கும்ப்ளே. 26.3 ஓவர்கள் வீசி 74 ரன்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.   லேகர் மற்றும் கும்ப்ளே என இருவரும் இரண்டாவது இன்னிங்ஸில் தான் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். அந்த இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து மற்றும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. அஜாஸ், முதல் இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜிம் லேகர் -கும்ப்ளே -அஜாஸ் படேல் : ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள்!
Web Designing Company in Coimbatore - Creativepoint

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அரிய சாதனை படைத்துள்ளார் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல். அதுவும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

image

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால், கில், புஜாரா, கோலி, ஷ்ரேயஸ், சாஹா, அஸ்வின், அக்சர், ஜெயந்த் யாதவ், சிராஜ் என பத்து பேட்ஸ்மேன்களை அவுட் செய்துள்ளார். 

47.5 ஓவர்கள் வீசி 119 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். இதில் 12 மெய்டன் ஓவர்கள் அடங்கும். 

image

>ஜிம் லேகர் : இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ஜிம் லேகர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த 1956-இல் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 51.2 ஓவர்கள் வீசி 53 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். 

image

>அனில் கும்ப்ளே : பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த 1999-இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் அனில் கும்ப்ளே. 26.3 ஓவர்கள் வீசி 74 ரன்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.  

லேகர் மற்றும் கும்ப்ளே என இருவரும் இரண்டாவது இன்னிங்ஸில் தான் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். அந்த இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து மற்றும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. அஜாஸ், முதல் இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.