கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்ரல் 29: ‘கொரோனா பரவல் முதல் வெளிநாடுகள் உதவி வரை’

> தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா நோய் பரவல் மிக வேகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 39 பேர் உட்பட 17 ஆயிரத்து 858 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 554 சிறார்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 5ஆம் தேதி அன்று 128 சிறார்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது தொடர்ந்து 7ஆவது நாளாக சிறார்களின் தினசரி பாதிப்பு 500ஐ கடந்து பதிவாகி வருகிறது. தமிழகத்தில் இதுவரையிலான கொரோன பாதிப்பு 11 லட்சத்து 48 ஆயிரத்து 64ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 15 ஆயிரத்து 542 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 10 லட்சத்து 21 ஆயிரத்து 575 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 107 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 933ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 556 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 445 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 164 பேரும், கோவை மாவட்டத்தில் ஆயிரத்து எட்டு பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 792 பேரும், நெல்லை மாவட்டத்தில் 849 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 576 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா நோய் பரவல் மிக வேகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 39 பேர் உட்பட 17 ஆயிரத்து 858 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 554 சிறார்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 5ஆம் தேதி அன்று 128 சிறார்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது தொடர்ந்து 7ஆவது நாளாக சிறார்களின் தினசரி பாதிப்பு 500ஐ கடந்து பதிவாகி வருகிறது. தமிழகத்தில் இதுவரையிலான கொரோன பாதிப்பு 11 லட்சத்து 48 ஆயிரத்து 64ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 15 ஆயிரத்து 542 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 10 லட்சத்து 21 ஆயிரத்து 575 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 107 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 933ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 556 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 445 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 164 பேரும், கோவை மாவட்டத்தில் ஆயிரத்து எட்டு பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 792 பேரும், நெல்லை மாவட்டத்தில் 849 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 576 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். > கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக சென்னையில் 4-வது நாளாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழக அரசே நேரடியாக மருந்தை விற்பனை செய்து வருகிறது. கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், அதிகாலை 4 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்தை வாங்கினர். சென்னை மட்டும் இல்லாமல் வேலூர், கடலூர், கோவை, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் வந்த மக்கள் சுமார் 8 மணி முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்து மருந்தை வாங்கிச் சென்றனர். மருந்து வாங்க வருபவர்களிடம் ஆதார், மருத்துவர் பரிந்துரை கடிதம் ஆகியவற்றை சரிபார்ப்பதற்கு காலஅவகாசம் தேவைப்படுதால், தாமதமாகுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. > கொரோனா பரவத் தொடங்கியதிலிருந்து அமைதியாக இருந்துவிட்டு, தற்போது துரிதமாக செயல்படுவதாக கூறுவது ஏன் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ரெம்டெசிவிர், படுக்கைகள், வெண்டிலேட்டர், ஆக்சிஜன் ஆகியவற்றின் கையிருப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ரெம்டெசிவிர் விற்பனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என்றும், மருந்து கள்ளச்சந்தையில் விற்பனையாகிறது என்று செய்தி வெளியாகி உள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கூடுதல் மையங்கள் அமைப்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்றார். மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், கொரோனா தடுப்பிற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இரண்டாவது அலை என்பது எதிர்பாராதது எனக் குறிப்பிட்டார். கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி அமர்வு, இரண்டாவது அலை தீவிரமாகியுள்ள நிலையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி செயல்படுவதாக சுட்டிக்காட்டினர். > மாநில அரசுகள் வசம் ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசின் விளக்கம் வெளியாகியுள்ளது. அதன்படி, வியாழக்கிழமை நிலவரப்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு கோடிக்கும் மேல் கொரோனா தடுப்பூசி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 3 நாட்களில் மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. >கொரோனா வைரஸ் போல தலைக்கவசம் அணிந்து சென்னை போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி நடத்தினர். பேரணியை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். மெரினா கடற்கரையில் காந்திசிலை சந்திப்பில் தொடங்கி, புனித ஜார்ஜ் பள்ளி வரை பல முக்கிய சாலைகள் வழியாக 84 இருசக்கர வாகனங்களில் போக்குவரத்துகாவலர்கள் பேரணியாகச்

கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்ரல் 29: ‘கொரோனா பரவல் முதல் வெளிநாடுகள் உதவி வரை’

> தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா நோய் பரவல் மிக வேகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 39 பேர் உட்பட 17 ஆயிரத்து 858 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 554 சிறார்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 5ஆம் தேதி அன்று 128 சிறார்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது தொடர்ந்து 7ஆவது நாளாக சிறார்களின் தினசரி பாதிப்பு 500ஐ கடந்து பதிவாகி வருகிறது. தமிழகத்தில் இதுவரையிலான கொரோன பாதிப்பு 11 லட்சத்து 48 ஆயிரத்து 64ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 15 ஆயிரத்து 542 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 10 லட்சத்து 21 ஆயிரத்து 575 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 107 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 933ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 556 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 445 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 164 பேரும், கோவை மாவட்டத்தில் ஆயிரத்து எட்டு பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 792 பேரும், நெல்லை மாவட்டத்தில் 849 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 576 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா நோய் பரவல் மிக வேகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 39 பேர் உட்பட 17 ஆயிரத்து 858 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 554 சிறார்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 5ஆம் தேதி அன்று 128 சிறார்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது தொடர்ந்து 7ஆவது நாளாக சிறார்களின் தினசரி பாதிப்பு 500ஐ கடந்து பதிவாகி வருகிறது. தமிழகத்தில் இதுவரையிலான கொரோன பாதிப்பு 11 லட்சத்து 48 ஆயிரத்து 64ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 15 ஆயிரத்து 542 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 10 லட்சத்து 21 ஆயிரத்து 575 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 107 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 933ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 556 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 445 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 164 பேரும், கோவை மாவட்டத்தில் ஆயிரத்து எட்டு பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 792 பேரும், நெல்லை மாவட்டத்தில் 849 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 576 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

> கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக சென்னையில் 4-வது நாளாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழக அரசே நேரடியாக மருந்தை விற்பனை செய்து வருகிறது. கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், அதிகாலை 4 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்தை வாங்கினர். சென்னை மட்டும் இல்லாமல் வேலூர், கடலூர், கோவை, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் வந்த மக்கள் சுமார் 8 மணி முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்து மருந்தை வாங்கிச் சென்றனர். மருந்து வாங்க வருபவர்களிடம் ஆதார், மருத்துவர் பரிந்துரை கடிதம் ஆகியவற்றை சரிபார்ப்பதற்கு காலஅவகாசம் தேவைப்படுதால், தாமதமாகுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

> கொரோனா பரவத் தொடங்கியதிலிருந்து அமைதியாக இருந்துவிட்டு, தற்போது துரிதமாக செயல்படுவதாக கூறுவது ஏன் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ரெம்டெசிவிர், படுக்கைகள், வெண்டிலேட்டர், ஆக்சிஜன் ஆகியவற்றின் கையிருப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ரெம்டெசிவிர் விற்பனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என்றும், மருந்து கள்ளச்சந்தையில் விற்பனையாகிறது என்று செய்தி வெளியாகி உள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கூடுதல் மையங்கள் அமைப்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்றார். மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், கொரோனா தடுப்பிற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இரண்டாவது அலை என்பது எதிர்பாராதது எனக் குறிப்பிட்டார். கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி அமர்வு, இரண்டாவது அலை தீவிரமாகியுள்ள நிலையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி செயல்படுவதாக சுட்டிக்காட்டினர்.

> மாநில அரசுகள் வசம் ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசின் விளக்கம் வெளியாகியுள்ளது. அதன்படி, வியாழக்கிழமை நிலவரப்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு கோடிக்கும் மேல் கொரோனா தடுப்பூசி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 3 நாட்களில் மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

>கொரோனா வைரஸ் போல தலைக்கவசம் அணிந்து சென்னை போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி நடத்தினர். பேரணியை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். மெரினா கடற்கரையில் காந்திசிலை சந்திப்பில் தொடங்கி, புனித ஜார்ஜ் பள்ளி வரை பல முக்கிய சாலைகள் வழியாக 84 இருசக்கர வாகனங்களில் போக்குவரத்துகாவலர்கள் பேரணியாகச் சென்றனர். எமதர்மன் போல வேடமணிந்த நபர் சிக்னல்களில் நின்று கொண்டும் பைக்கில் சென்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதைப்போல கொரோனா வைரஸ் போல ஹெல்மெட் அணிந்து கொண்டு போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

> நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 15 கோடியை கடந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 15 கோடியே 20 ஆயிரத்து 648 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் 93 லட்சத்து 68 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முதல் டோஸ் எடுத்துக்கொண்ட நிலையில், 61 லட்சத்து 48 ஆயிரம் பேர் 2 ஆம் டோஸ் எடுத்துக் கொண்டனர். அதேபோல, ஒரு கோடியே 23 லட்சத்து 19 ஆயிரத்து 903 முன்களப்பணியாளர்கள் முதல் டோஸ் எடுத்துக் கொண்ட நிலையில், அவர்களில் 66 லட்சத்து 12 ஆயிரத்து 789 பேர் 2 ஆம் டோஸ் போட்டுக்கொண்டுள்ளனர். சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களில் பலர், 2 ஆம் டோஸ் போடுவதில் சுணக்கம் காட்டுகிறார்கள். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 21 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

> ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியாவில் கொரோனா நோயாளிகள் திணறும் நிலையில், இந்தியாவுக்கு 40க்கும் அதிகமான நாடுகள் உதவ முன்வந்துள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் 550 ஆக்சிஜன் உற்பத்தி பிளாண்ட்டுகள் வர உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்த்தன் ஷிறிங்கலா தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் இருந்து 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 75 வென்ட்டிலேட்டர்கள், உள்ளிட்ட 22 மெட்ரிக் டன் பொருட்களுடன் 2 விமானங்கள் வந்துள்ளன. ஆக்சிஜன் உற்பத்தி கருவிகளுடன் அமெரிக்காவில் இருந்து 3 விமானங்கள் நாளை வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள், 15 மில்லியன் என் 95 முகக்கவசங்கள், 10 லட்சம் ரேபிட் பரிசோதனை கருவிகள் உட்பட 100 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

> ஆக்சிஜன் சிலிண்டர் எனக் கூறி தீயணைப்பானை விற்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். உத்தம் நக பகுதியை சேர்ந்த அசுதோஷ் சவுகான் என்ற 19 வயது இளைஞரும், ஆயுஷ் குமார் என்ற 22 வயது இளைஞரும் சேர்ந்து இந்த வேலையை செய்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவரின் உறவினர் இவர்களிடம் ஏமாந்துள்ளார். தீயணைக்கும் கருவிகள் இரண்டை தலா பத்தாயிரம் ரூபாய்க்கு அவர்கள் விற்றுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

> கர்நாடகாவில் இருந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போன நிலையில், அவர்கள் நீலகிரி மாவட்டத்துக்குள் வராமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 3 ஆயிரம் பேர் தங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்த நிலையில், பலர் வீடுகளை காலி செய்துவிட்டு சென்றுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர்கள் நீலகிரி மாவட்டத்துக்குள் வராமல் இருக்கும் வகையில் சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகம் மற்றும் கேரளாவில் இருந்து வருபவர்கள் இ பாஸ் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதால், இ பாஸ் இன்றி யாரும் நுழைய முடியாது என்று மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

> கொரோனா பெருந்தொற்றை விட ஆபத்தானவையாக மாறியுள்ளன, கொரோனாவுக்கு இது தான் சிகிச்சை என கூறி சமூக ஊடகங்களில் வலம் வரும் பதிவுகள். அப்படி மூக்கினுள் எலுமிச்சை சாற்றை விட்டால், அது ஆக்சிஜன் அளவை அதிகரித்து கொரோனாவால் இருந்து காக்கும் என்ற வீடியோவை முன்னாள் எம்பி விஜய் சங்கேஸ்வர் வெளியிட்டிருக்கிறார். இதனை நம்பிய கர்நாடகா மாநிலம் சிந்தானூரை சேர்ந்த 45 வயது ஆசிரியர், பசவராஜ் மல்லிபட்டில், தனக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனாவாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் மூக்கினுள் எலுமிச்சை சாற்றை விட்டிருக்கிறார். பின்னர் வாந்தி எடுத்த அவர் உயிரிழந்துவிட்டார். பொதுமக்கள் இது போன்ற வதந்திகளை நம்பி உயிரை பறிக்கொடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

> கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல முன்னணி நடிகர்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு இறுதியில்தான் மீண்டும் தொடங்கின. இதன்பின் பல தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் அரசு விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்றி படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கொரோனா 2 அலை அதிகரித்து வருவதால் மீண்டும் திரைத்துறையினருக்கு சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. குறிப்பாக திரையரங்குகள் அனைத்தையும் மூட உத்தரவிட்டது. ஆனால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பை நடத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. படப்பிடிப்புகளில் பங்கேற்கும் தொழிலாளர்கள், நடிகர்கள் என அனைவருக்கும் உடல் வெப்ப நிலை சோதனை செய்து படப்பிடிப்புகள் நடத்தப்படுகிறது. ஆனால் இது சிறிய படங்களுக்கு மட்டுமே பொருத்தமாக உள்ளது. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பல நெருக்கடிகள் உள்ளன என கூறப்படுகிறது. குறிப்பாக ஒரு காட்சியை படமாக்க நூற்றுக்கும் அதிகமானவர்கள் தேவைப்படுகின்றனர். இதன்மூலம் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது என்பதால் பல படக்குழுவினர் தாமாகேவே முன்வந்து படப்பிடிப்பை ரத்து செய்துள்ளனர். இதன்படி சூர்யா-40, விக்ரம்-60, சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' உள்ளிட்ட பல படங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பல திரைப்படங்களின் படப்பிடிப்பு இந்த வாரத்துடன் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. திரைப்படங்களின் படப்பிடிப்பிற்கு அரசு அனுமதி வழங்கியிருந்தாலும், தொழில்நுட்ப கலைஞர்கள் நடிகர்கள் பாதுகாப்பு முக்கியமானதாக உள்ளது. அதன் காரணமாகவே படப்பிடிப்பு நிறுத்தியுள்ளோம் என்று கூறுகின்றனர். அதேபோல் படப்பிடிப்பை நிறுத்தியிருப்பதால் நிச்சயம் பட்ஜெட் உயரும் அதை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

> கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ராஜஸ்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணி 7.5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. ராயல் ராஜஸ்தான் அறக்கட்டளை மற்றும் பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளை மூலம் நிதி திரட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அணியின் வீரர்களும், உரிமையாளர்களும் நிதி வழங்கியுள்ளனர். முன்னதாக கிரிக்கெட் வீரர்கள் பேட் கம்மின்ஸ், பிரெட் லீ ஆகியோர் தனிப்பட்ட முறையில் கொரோனாவுக்காக நிவாரண நிதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

> கொரோனாவாலிருந்து குணமடைந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பெற்றோர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் தோனியின் தந்தை பான் சிங், தாய் தேவகி தேவி ஆகியோர் ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனர். இருவரின் ரிசல்ட்டும் நெகடிவ் என வந்த நிலையில், தோனியின் பெற்றோர் வீடு திரும்பினர்.