ஐபிஎல்: மகேந்திர சிங் தோனியின் 4 தனித்துவமான சாதனைகள்

ஐபிஎல் களத்தில் பல மெச்சத்தக்க சாதனைகளை வசப்படுத்திய மகேந்திர சிங் தோனி, 4 தனித்துவமான சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல மலைக்க வைக்கும் சாதனைகளை தன் வசம் வைத்துள்ள மகேந்திர சிங் தோனி, ஐபிஎல்லிலும் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்துள்ளார். விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன், கேப்டன் என அவர் நிகழ்த்திய சாதனைகள் எண்ணிலடங்கா. இவை தவிர ஐபிஎல்லில் 4 தனித்துவமான சாதனைகளுக்குச் சொந்தக்காரராக உள்ளார் தோனி. அந்தப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது கடைசி ஓவர்களில் தோனி நிகழ்த்திய விளாசல்கள் சார்ந்தது. ஐபிஎல் வரலாற்றில் 20 ஆவது ஓவர்களில் அதிக ரன்கள் விளாசிய வீரராக உள்ளார் தோனி. இதுவரை அவர் ஐபிஎல்லில் அடித்த ரன்களில் 550க்கும் மேற்பட்டவை 20 ஆவது ஓவரில் விளாசியவையே. பட்டியலில் 3 ஆம் இடத்தில் உள்ளது. ஐபிஎல்லில் அதிக முறை இறுதிப் போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனை. 8 முறை சென்னை அணிக்கு கேப்டனாக இறுதிப் போட்டிகளில் விளையாடிய தோனி, 2017 ஆம் ஆண்டு புனே அணியில் சக வீரராக இறுதிப் போட்டியில் விளையாடினார். 13 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் 9 முறை Final களில் விளையாடியவர் தோனி மட்டுமே. பேட்டிங் வரிசையில் வித்தியாசமான இடங்களில் களமிறங்கி தோனி அரை சதங்கள் விளாசியதே இந்த சாதனைப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பேட்டிங் வரிசையில் 3,4,5,6,7 ஆகிய ஐந்து வித்தியாசமான இடங்களிலும் களமிறங்கி அரை சதம் விளாசிய வீரராக தோனி மட்டுமே உள்ளார். முதலிடத்தில் உள்ள சாதனையை தோனியின் வாழ்நாள் சாதனை என்றே கூறலாம். சச்சின், டிராவிட் காலகட்டங்களில் தொடங்கி, கோலி, ரோகித் காலகட்டங்களிலும் தற்போதைய இளம் தலைமுறை கால கட்டமான பந்த், சஞ்சு சாம்சன் கால கட்டத்திலும் கேப்டனாக வலம் வருகிறார் தோனி. ஜாம்பவான்கள் காலம் தொடங்கி இளங்கன்றுகளின் அத்தியாயத்திலும் தோனியின் கால்தடம் பதிக்கப்பட்டுள்ளது மெச்சத்தக்க சாதனையே.

ஐபிஎல்: மகேந்திர சிங் தோனியின் 4 தனித்துவமான சாதனைகள்

ஐபிஎல் களத்தில் பல மெச்சத்தக்க சாதனைகளை வசப்படுத்திய மகேந்திர சிங் தோனி, 4 தனித்துவமான சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல மலைக்க வைக்கும் சாதனைகளை தன் வசம் வைத்துள்ள மகேந்திர சிங் தோனி, ஐபிஎல்லிலும் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்துள்ளார். விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன், கேப்டன் என அவர் நிகழ்த்திய சாதனைகள் எண்ணிலடங்கா. இவை தவிர ஐபிஎல்லில் 4 தனித்துவமான சாதனைகளுக்குச் சொந்தக்காரராக உள்ளார் தோனி.

image

அந்தப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது கடைசி ஓவர்களில் தோனி நிகழ்த்திய விளாசல்கள் சார்ந்தது. ஐபிஎல் வரலாற்றில் 20 ஆவது ஓவர்களில் அதிக ரன்கள் விளாசிய வீரராக உள்ளார் தோனி. இதுவரை அவர் ஐபிஎல்லில் அடித்த ரன்களில் 550க்கும் மேற்பட்டவை 20 ஆவது ஓவரில் விளாசியவையே. பட்டியலில் 3 ஆம் இடத்தில் உள்ளது. ஐபிஎல்லில் அதிக முறை இறுதிப் போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனை. 8 முறை சென்னை அணிக்கு கேப்டனாக இறுதிப் போட்டிகளில் விளையாடிய தோனி, 2017 ஆம் ஆண்டு புனே அணியில் சக வீரராக இறுதிப் போட்டியில் விளையாடினார். 13 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் 9 முறை Final களில் விளையாடியவர் தோனி மட்டுமே.

image

பேட்டிங் வரிசையில் வித்தியாசமான இடங்களில் களமிறங்கி தோனி அரை சதங்கள் விளாசியதே இந்த சாதனைப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பேட்டிங் வரிசையில் 3,4,5,6,7 ஆகிய ஐந்து வித்தியாசமான இடங்களிலும் களமிறங்கி அரை சதம் விளாசிய வீரராக தோனி மட்டுமே உள்ளார். முதலிடத்தில் உள்ள சாதனையை தோனியின் வாழ்நாள் சாதனை என்றே கூறலாம்.

சச்சின், டிராவிட் காலகட்டங்களில் தொடங்கி, கோலி, ரோகித் காலகட்டங்களிலும் தற்போதைய இளம் தலைமுறை கால கட்டமான பந்த், சஞ்சு சாம்சன் கால கட்டத்திலும் கேப்டனாக வலம் வருகிறார் தோனி. ஜாம்பவான்கள் காலம் தொடங்கி இளங்கன்றுகளின் அத்தியாயத்திலும் தோனியின் கால்தடம் பதிக்கப்பட்டுள்ளது மெச்சத்தக்க சாதனையே.