அடுத்து சென்னை, மும்பைதான்... ஜார்ஜியாவில் இருந்து திரும்பும் 'விஜய் 65' படக்குழு

நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'விஜய் 65' புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இதற்காக விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட படக்குழுவினர் ஜார்ஜியா சென்றுள்ளனர். கொரோனா சூழலுக்கு மத்தியிலும் தகுந்த ஏற்பாடுகளுடன் படக்குழு அங்கு சென்றது. ஜார்ஜியாவில் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் எதிர்பார்த்தது போலவே இந்த மாதத்தில் அங்கு முடிந்துவிடும் என்கிறது படக்குழு. வரும் 26-ம் தேதி முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தபின், 28-ம் தேதி நாடு திரும்பும் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர், மே முதல் வாரத்தில் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளது. சென்னையில் ஒரு பாடல் படப்பிடிப்புடன் இரண்டாவது கட்டத்தைத் தொடங்க இருக்கிறார்கள். ஹைதராபாத்திலும், மும்பையில் சில காட்சிகளிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு. எனினும் இந்தியாவில் அதிகரித்து வரும் காரணமாக, இங்கு வந்தபின் இந்த திட்டமிடலில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்றும், இனி வெளிநாடு ஷூட்டிங் இருக்காது என்றும் படக்குழுவைச் சேர்ந்த சிலர் 'பிங்வில்லா' தளத்திடம் தகவல் பகிர்ந்துள்ளனர். இதற்கிடையே, சமீபத்தில் ஜார்ஜியாவில் அவ்வப்போது மழை பெய்வதால் படத்தின் காட்சிகளை எடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது. ஒரு நாளில் ஓரிரு காட்சிகளை மட்டுமே படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இயக்குனர் நெல்சன், நடிகர் விஜய் உள்ளிட்டோர் ஆலோசித்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டது. ஆனால், அதற்கடுத்து நிலைமை சரியானதால் தற்போது முதல்கட்ட படப்பிடிப்பை விறுவிறுப்பாக எடுத்து முடித்துள்ளது படக்குழு.

அடுத்து சென்னை, மும்பைதான்... ஜார்ஜியாவில் இருந்து திரும்பும் 'விஜய் 65' படக்குழு

நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'விஜய் 65' புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இதற்காக விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட படக்குழுவினர் ஜார்ஜியா சென்றுள்ளனர். கொரோனா சூழலுக்கு மத்தியிலும் தகுந்த ஏற்பாடுகளுடன் படக்குழு அங்கு சென்றது.

ஜார்ஜியாவில் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் எதிர்பார்த்தது போலவே இந்த மாதத்தில் அங்கு முடிந்துவிடும் என்கிறது படக்குழு. வரும் 26-ம் தேதி முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தபின், 28-ம் தேதி நாடு திரும்பும் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர், மே முதல் வாரத்தில் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளது. சென்னையில் ஒரு பாடல் படப்பிடிப்புடன் இரண்டாவது கட்டத்தைத் தொடங்க இருக்கிறார்கள்.

ஹைதராபாத்திலும், மும்பையில் சில காட்சிகளிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு. எனினும் இந்தியாவில் அதிகரித்து வரும் காரணமாக, இங்கு வந்தபின் இந்த திட்டமிடலில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்றும், இனி வெளிநாடு ஷூட்டிங் இருக்காது என்றும் படக்குழுவைச் சேர்ந்த சிலர் 'பிங்வில்லா' தளத்திடம் தகவல் பகிர்ந்துள்ளனர்.

இதற்கிடையே, சமீபத்தில் ஜார்ஜியாவில் அவ்வப்போது மழை பெய்வதால் படத்தின் காட்சிகளை எடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது. ஒரு நாளில் ஓரிரு காட்சிகளை மட்டுமே படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இயக்குனர் நெல்சன், நடிகர் விஜய் உள்ளிட்டோர் ஆலோசித்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டது. ஆனால், அதற்கடுத்து நிலைமை சரியானதால் தற்போது முதல்கட்ட படப்பிடிப்பை விறுவிறுப்பாக எடுத்து முடித்துள்ளது படக்குழு.