பாரா-விளையாட்டு வீரர்களுக்கு நிதி திரட்ட நடிகை ரெஜினா புதிய முயற்சி!

விளையாட்டு வீரர்களுக்கு உதவுவதற்காக புதிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளார், நடிகை ரெஜினா கசாண்ட்ரா. பெல்ஜியம் மற்றும் போர்ச்சுகலில் மே, ஜூன் மாதங்களில் நடைபெறவிருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் பாரா விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கு தேவையான நிதி திரட்டுவதற்காகா சென்னையில் இருந்து புதுச்சேரி வரை 140 கி.மீ தூரம் சைக்கிளில் செல்ல இருக்கிறார் ரெஜினா. ஆதித்யா மேத்தா என்ற தனியார் அறக்கட்டளை சார்பாக இந்த சைக்கிளிங் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பயணம் மூலம் நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சுமார் 8 மணி நேரத்தில் சென்னையில் இருந்து பாண்டிச்சேரியை சைக்கிள் மூலம் கடக்க இருக்கிறார் ரெஜினா. இவர் இப்படி செய்வது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு டிசம்பரில், பாரா விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக இதே தனியார் அறக்கட்டளை ஏற்பாடு செய்த மற்றொரு நிதி திரட்டும் நிகழ்வில் ரெஜினா பங்கேற்றார். அப்போதும் சைக்கிளிங் மூலமாக ஹைதராபாத் முதல் தெலுங்கானாவில் மஹ்புப்நகர் வரை 104 கி.மீ பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சாகச விளையாட்டு மற்றும் உடற்தகுதி தொடர்பான பிற நடவடிக்கைகளிலும் ஆர்வம் கொண்டவர் நடிகை ரெஜினா. வைல்ட் வாரியர் இமயமலை சாகச பந்தயத்தில் அவர் பங்கேற்றுள்ளார். இந்தப் போட்டியில் பங்கேற்பவர்கள் மவுண்டன் பைக்கிங், வைல்ட் ரிவர் ராஃப்டிங் மற்றும் ஹைகிங் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை எல்லாம் செய்துதான், இந்தப் போட்டியில் ரெஜினா கலந்துகொண்டார் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் ரெஜினா நடிப்பில், 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் ரிலீசானது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரா-விளையாட்டு வீரர்களுக்கு நிதி திரட்ட நடிகை ரெஜினா புதிய முயற்சி!

விளையாட்டு வீரர்களுக்கு உதவுவதற்காக புதிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளார், நடிகை ரெஜினா கசாண்ட்ரா.

பெல்ஜியம் மற்றும் போர்ச்சுகலில் மே, ஜூன் மாதங்களில் நடைபெறவிருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் பாரா விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கு தேவையான நிதி திரட்டுவதற்காகா சென்னையில் இருந்து புதுச்சேரி வரை 140 கி.மீ தூரம் சைக்கிளில் செல்ல இருக்கிறார் ரெஜினா.

ஆதித்யா மேத்தா என்ற தனியார் அறக்கட்டளை சார்பாக இந்த சைக்கிளிங் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பயணம் மூலம் நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

சுமார் 8 மணி நேரத்தில் சென்னையில் இருந்து பாண்டிச்சேரியை சைக்கிள் மூலம் கடக்க இருக்கிறார் ரெஜினா. இவர் இப்படி செய்வது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு டிசம்பரில், பாரா விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக இதே தனியார் அறக்கட்டளை ஏற்பாடு செய்த மற்றொரு நிதி திரட்டும் நிகழ்வில் ரெஜினா பங்கேற்றார். அப்போதும் சைக்கிளிங் மூலமாக ஹைதராபாத் முதல் தெலுங்கானாவில் மஹ்புப்நகர் வரை 104 கி.மீ பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாகச விளையாட்டு மற்றும் உடற்தகுதி தொடர்பான பிற நடவடிக்கைகளிலும் ஆர்வம் கொண்டவர் நடிகை ரெஜினா. வைல்ட் வாரியர் இமயமலை சாகச பந்தயத்தில் அவர் பங்கேற்றுள்ளார். இந்தப் போட்டியில் பங்கேற்பவர்கள் மவுண்டன் பைக்கிங், வைல்ட் ரிவர் ராஃப்டிங் மற்றும் ஹைகிங் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை எல்லாம் செய்துதான், இந்தப் போட்டியில் ரெஜினா கலந்துகொண்டார் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் ரெஜினா நடிப்பில், 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் ரிலீசானது என்பது குறிப்பிடத்தக்கது.