“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்

“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம் மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை ஆறு கட்ட தேர்தல் முடிந்துள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம். எந்தவொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாததால் இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேர் புதிதாக நோய் தொற்று பரவலினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பரப்புரையை புறக்கணித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்

“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்

மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை ஆறு கட்ட தேர்தல் முடிந்துள்ளன.

இந்நிலையில் அரசியல் கட்சிகள் மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம். எந்தவொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாததால் இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேர் புதிதாக நோய் தொற்று பரவலினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பரப்புரையை புறக்கணித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.