கேரளா: 27,000-ஐ தொடும் தினசரி கொரோனா பாதிப்பு

கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது.  திருவனந்தபுரத்தில் இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பில் “கேரளாவில் கொரோனா மொத்த பாதிப்பு பதிமூன்று லட்சத்தை கடந்தது. ஒரே நாளில் மேலும் 26,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தபாதிப்பு எண்ணிக்கை 13,22,054 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 5,028 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 6,370 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 11, 60,472 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புடன் 1,56,226 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இங்கிலாந்திலிருந்து கேரளா திரும்பிய 116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேருக்கு உருமாறிய கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள கொரோனா தினசரி பாதிப்பில் அதிகபட்சமாக எர்ணாகுளம் 4,396, கோழிக்கோடு 3,372, திருச்சூர் 2,781, மலப்புரம் 2,776, கோட்டயம் 2,485, திருவனந்தபுரம் 2,223, கண்ணூர் 1,747, பாலக்காடு 1,518, பத்தனம்திட்டா 1,246, ஆலப்புழா 1,157 பேருக்கும், கொல்லம் 998, இடுக்கி 931, காசர்கோடு 701, வயனாடு 614 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

கேரளா: 27,000-ஐ தொடும் தினசரி கொரோனா பாதிப்பு

கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. 

திருவனந்தபுரத்தில் இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பில் “கேரளாவில் கொரோனா மொத்த பாதிப்பு பதிமூன்று லட்சத்தை கடந்தது. ஒரே நாளில் மேலும் 26,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தபாதிப்பு எண்ணிக்கை 13,22,054 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு இன்று 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 5,028 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 6,370 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 11, 60,472 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புடன் 1,56,226 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இங்கிலாந்திலிருந்து கேரளா திரும்பிய 116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேருக்கு உருமாறிய கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரள கொரோனா தினசரி பாதிப்பில் அதிகபட்சமாக எர்ணாகுளம் 4,396, கோழிக்கோடு 3,372, திருச்சூர் 2,781, மலப்புரம் 2,776, கோட்டயம் 2,485, திருவனந்தபுரம் 2,223, கண்ணூர் 1,747, பாலக்காடு 1,518, பத்தனம்திட்டா 1,246, ஆலப்புழா 1,157 பேருக்கும், கொல்லம் 998, இடுக்கி 931, காசர்கோடு 701, வயனாடு 614 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.