கொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்?

செய்தித்தாள்களைப் படித்தே ஆகவேண்டுமென்பவர்களுக்கு ஆன்லைனில் படிப்பது ஒரு வாய்ப்பாக இருக்கிறது. ஆனால், கிராமப்புறங்களில், இணைய இணைப்பு மோசமாக உள்ள பகுதிகளில் இது சாத்தியமில்லை.

கொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்?
Newspaper -covid19

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளில் செய்தித் தாள் விநியோகம் பெருமளவில் தடைபட்டுள்ளது. ஏற்கனவே விளம்பரங்கள் வெகுவாகக் குறைந்திருக்கும் நிலையில் செய்தித்தாள்கள் இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளப்போகின்றன?

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவிலிருந்து நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கிலிருந்து மளிகை, பால், செய்தித்தாள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு விதிவிலக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மார்ச் 25ஆம் தேதி செய்தித்தாள்களின் விநியோகம் சிறிய அளவில் தடைபட்டது.

ஆனால், மார்ச் 26ஆம் தேதி முதல் பெரும்பாலான வீடுகளுக்கு செய்தித்தாள் விநியோகம் நிறுத்தப்பட்டது. மிகச் சில இடங்களில் நடைபாதைகளில் வைத்து செய்தித்தாள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மார்ச் 25ஆம் தேதியன்று செய்தித்தாள்களை இருசக்கர வாகனங்களில் கொண்டுசெல்லும் ஒருவரைக் காவல்துறையினர் தாக்கிய வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவின. இம்மாதிரியான சூழலில் பேப்பர்களை வீடுவீடாக விநியோகம் செய்யும் இளைஞர்கள் வேலைக்குவர மறுப்பதாக சென்னையில் செய்தித்தாள் விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் வேலாயுதம் என்பவர் தெரிவித்தார்.

செய்தித் தாள் நிறுவனத்திலிருந்து தங்களை செய்தித்தாள்கள் வந்தடைந்துவிட்டாலும், அவற்றை வீடுகளுக்குக் கொண்டுபோய் சேர்க்க முடியாத நிலை இருக்கிறது என்கிறார் அவர்.

மேலும் விவரங்களை அறிந்துக்கொள்ள 

Source:https://www.bbc.com/tamil/india-52060776