முசிறி: மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவன் உயிரிழப்பு! ஒரே இடத்தில் தகனம்!

முசிறியில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முசிறி தென் கள்ளர் தெருவில் வசித்தவர் விவசாயி முத்துவீரன் (80) என்பவரின் மனைவி ராமாமிர்தம் (79). வயது முதிர்வு காரணமாக முத்துவீரன் கடந்த 10 நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கணவனுக்கு உடல்நிலை சரியில்லை என்ற கவலையால் ராமாமிர்ததிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதில் நேற்று ராமாமிர்தம் வீட்டிலேயே உயிரிழந்தார். இதையறிந்த முத்துவீரன் இதுகுறித்து மிகவும் வருத்தமடைந்து, தனது இரு மகன்கள் மற்றும் மருமகள்களிடம் மனைவி இறந்த வேதனையை கூறி அழுது புலம்பியுள்ளார். இந்நிலையில் ராமாமிர்தத்திற்கு இறுதி சடங்குகள் செய்துகொண்டிருந்த போது படுக்கையில் படுத்தவாறு இறுதி காரிய நிகழ்வுகளை பார்த்த முத்துவீரன் திடீரென உயிரிழந்தார். இதனால் முத்துவீரன் குடும்பத்தினரும் துக்க நிகழ்வுக்கு வந்திருந்த உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து குடும்பத்தினர் முத்து வீரனுக்கும் இறுதி சடங்குகள் செய்து இருவரையும் தனித்தனி அமரர் ஊர்தி வாகனத்தில் ஏற்றி இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் ஒரே தகன மேடையில் இருவரையும் அருகருகே படுக்க வைத்து எரியூட்டினர். மனைவி இறந்த அதிர்ச்சியால் கணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

முசிறி: மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவன் உயிரிழப்பு! ஒரே இடத்தில் தகனம்!

முசிறியில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முசிறி தென் கள்ளர் தெருவில் வசித்தவர் விவசாயி முத்துவீரன் (80) என்பவரின் மனைவி ராமாமிர்தம் (79). வயது முதிர்வு காரணமாக முத்துவீரன் கடந்த 10 நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கணவனுக்கு உடல்நிலை சரியில்லை என்ற கவலையால் ராமாமிர்ததிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

image

இதில் நேற்று ராமாமிர்தம் வீட்டிலேயே உயிரிழந்தார். இதையறிந்த முத்துவீரன் இதுகுறித்து மிகவும் வருத்தமடைந்து, தனது இரு மகன்கள் மற்றும் மருமகள்களிடம் மனைவி இறந்த வேதனையை கூறி அழுது புலம்பியுள்ளார். இந்நிலையில் ராமாமிர்தத்திற்கு இறுதி சடங்குகள் செய்துகொண்டிருந்த போது படுக்கையில் படுத்தவாறு இறுதி காரிய நிகழ்வுகளை பார்த்த முத்துவீரன் திடீரென உயிரிழந்தார்.

இதனால் முத்துவீரன் குடும்பத்தினரும் துக்க நிகழ்வுக்கு வந்திருந்த உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து குடும்பத்தினர் முத்து வீரனுக்கும் இறுதி சடங்குகள் செய்து இருவரையும் தனித்தனி அமரர் ஊர்தி வாகனத்தில் ஏற்றி இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

image

பின்னர் ஒரே தகன மேடையில் இருவரையும் அருகருகே படுக்க வைத்து எரியூட்டினர். மனைவி இறந்த அதிர்ச்சியால் கணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.