பிரஷாந்த்தின் ‘அந்தகன்’ படத்தில் இணைந்த நடிகர் கார்த்திக்!

தேசிய விருதுகளைக் குவித்த ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் ‘அந்தகன்’ படத்தில் இணைந்திருக்கிறார் நடிகர் கார்த்திக். சமீபத்தில் நடிகர் கார்த்திக் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியாகவில்லை. ஆனால், மூச்சுத் திணறல் இருந்ததால் உடல்நலம் குணமாகும் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது, முழுமையாக உடல்நலம் தேறிய கார்த்திக் பிரஷாந்த்தின் ‘அந்தகன்’ படத்தில் உற்சாகமுடன் இணைந்திருக்கிறார். 2018-ஆம் ஆண்டு இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை செய்திருந்தது 'அந்தாதூன்' திரைப்படம். ரூ.40 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.450 கோடி வசூல் செய்தது. இந்தப் படத்தில் ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். சிறந்த நடிப்பிற்காக ஆயூஷ்மான் குரானாவுக்கு தேசிய விருது,சிறந்த இந்திப் படம், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகளை 'அந்தாதூன்' அள்ளியது. இதன் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரஷாந்த், தபு கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த் நடிக்கிறார்கள். இவர்களுடன் வனிதா விஜய்குமார், பூவையார், சமுத்திரகனி உள்ளிட்டவர்கள் இணைந்த நிலையில் தற்போது கார்த்திக் இணைந்திருக்கிறார். அவரை இப்படத்தை இயக்கும் தியாகராஜன், நடிகை சிம்ரன் உள்ளிட்டவர்கள் அவரை வரவேற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பிரஷாந்த்தின் ‘அந்தகன்’ படத்தில் இணைந்த நடிகர் கார்த்திக்!

தேசிய விருதுகளைக் குவித்த ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் ‘அந்தகன்’ படத்தில் இணைந்திருக்கிறார் நடிகர் கார்த்திக்.

சமீபத்தில் நடிகர் கார்த்திக் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியாகவில்லை. ஆனால், மூச்சுத் திணறல் இருந்ததால் உடல்நலம் குணமாகும் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது, முழுமையாக உடல்நலம் தேறிய கார்த்திக் பிரஷாந்த்தின் ‘அந்தகன்’ படத்தில் உற்சாகமுடன் இணைந்திருக்கிறார்.

image

2018-ஆம் ஆண்டு இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை செய்திருந்தது 'அந்தாதூன்' திரைப்படம். ரூ.40 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.450 கோடி வசூல் செய்தது. இந்தப் படத்தில் ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

சிறந்த நடிப்பிற்காக ஆயூஷ்மான் குரானாவுக்கு தேசிய விருது,சிறந்த இந்திப் படம், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகளை 'அந்தாதூன்' அள்ளியது. இதன் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரஷாந்த், தபு கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் வனிதா விஜய்குமார், பூவையார், சமுத்திரகனி உள்ளிட்டவர்கள் இணைந்த நிலையில் தற்போது கார்த்திக் இணைந்திருக்கிறார். அவரை இப்படத்தை இயக்கும் தியாகராஜன், நடிகை சிம்ரன் உள்ளிட்டவர்கள் அவரை வரவேற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.