சிவகார்த்திகேயன் குரலில் ‘இன்னா மயிலு சிரிச்சிக்கின’ - லிஃப்ட்’ பட முதல் பாடல் வெளியீடு!

’பிக்பாஸ்’ புகழ் கவினின் ‘லிஃப்ட்’ படத்தில் சிவகார்த்திகேயன் பாடியுள்ள ‘இன்னா மயிலு சிரிச்சிக்கின’ முதல் பாடலை வெளியிட்டிருக்கிறது படக்குழு. கடந்த 2019 ஆம் ஆண்டு கவின் நடிப்பில் ‘நட்புனா என்னனு தெரியுமா’ படம் வெளியானது. அதனைத்தொடர்ந்து ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கூடுதல் கவனம் பெற்ற கவின் - இயக்குநர் வினித் கூட்டணியின் ‘லிஃப்ட’ பட அறிவிப்பு வெளியானது. கவினுக்கு ஜோடியாக அம்ருதா நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில் இன்று முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. பிரிட்டோ மைக்கேல் இசையில் சிவகார்த்திகேயனுடன்’சூப்பர் சிங்கர்’ பூவையாரும் இணைந்து பாடியிருக்கும் ‘இன்னா மயிலு சிரிச்சிக்கின’ விரைவில் இளைஞர்களின் ரிப்பீட் மோடில் ஒலிக்கும் என்பதை நிருபிக்கிறது இப்பாடலுக்கு குவிந்துள்ள கமெண்ட்டுகள்.

சிவகார்த்திகேயன் குரலில் ‘இன்னா மயிலு சிரிச்சிக்கின’ -  லிஃப்ட்’ பட முதல் பாடல் வெளியீடு!

’பிக்பாஸ்’ புகழ் கவினின் ‘லிஃப்ட்’ படத்தில் சிவகார்த்திகேயன் பாடியுள்ள ‘இன்னா மயிலு சிரிச்சிக்கின’ முதல் பாடலை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

கடந்த 2019 ஆம் ஆண்டு கவின் நடிப்பில் ‘நட்புனா என்னனு தெரியுமா’ படம் வெளியானது. அதனைத்தொடர்ந்து ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கூடுதல் கவனம் பெற்ற கவின் - இயக்குநர் வினித் கூட்டணியின் ‘லிஃப்ட’ பட அறிவிப்பு வெளியானது. கவினுக்கு ஜோடியாக அம்ருதா நடிக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில் இன்று முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. பிரிட்டோ மைக்கேல் இசையில் சிவகார்த்திகேயனுடன்’சூப்பர் சிங்கர்’ பூவையாரும் இணைந்து பாடியிருக்கும் ‘இன்னா மயிலு சிரிச்சிக்கின’ விரைவில் இளைஞர்களின் ரிப்பீட் மோடில் ஒலிக்கும் என்பதை நிருபிக்கிறது இப்பாடலுக்கு குவிந்துள்ள கமெண்ட்டுகள்.