ரோகித் சர்மாவை தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா அசத்தல்- டி20 போட்டியில் செய்த சாதனை

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி 2 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார். பார்படாஸ் அணிக்கு எதிரான காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில் முதல் 5 ரன்களை எடுத்ததன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்தார். இந்திய ஆடவர் அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 2 ஆயிரத்து 973 ரன்கள் எடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா 2000 ரன்களை கடந்து சாதனைப் படைத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி 79 இன்னிங்சில் 2004 ரன்களை குவித்துள்ளார் ஸ்மிருதி மந்தனா. இதன்மூலம் அவரது சராசரி 27.45 ஆகும். 14 அரைசதங்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 86 ரன்களை குவித்துள்ளார். ரோகித் சர்மா, ஸ்மிருதி மந்தனாவை தொடர்ந்து, இந்திய ஆடவர் அணியின் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான தவான் ஆயிரத்து 759 ரன்களும், இந்திய மகளின் அணியின் மிதாலி ராஜ் ஆயிரத்து 407 ரன்களும் எடுத்துள்ளனர்.

ரோகித் சர்மாவை தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா அசத்தல்- டி20 போட்டியில் செய்த சாதனை
Web Designing Company in Coimbatore - Creativepoint

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி 2 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார்.

பார்படாஸ் அணிக்கு எதிரான காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில் முதல் 5 ரன்களை எடுத்ததன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்தார். இந்திய ஆடவர் அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 2 ஆயிரத்து 973 ரன்கள் எடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா 2000 ரன்களை கடந்து சாதனைப் படைத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

image

துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி 79 இன்னிங்சில் 2004 ரன்களை குவித்துள்ளார் ஸ்மிருதி மந்தனா. இதன்மூலம் அவரது சராசரி 27.45 ஆகும். 14 அரைசதங்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 86 ரன்களை குவித்துள்ளார். ரோகித் சர்மா, ஸ்மிருதி மந்தனாவை தொடர்ந்து, இந்திய ஆடவர் அணியின் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான தவான் ஆயிரத்து 759 ரன்களும், இந்திய மகளின் அணியின் மிதாலி ராஜ் ஆயிரத்து 407 ரன்களும் எடுத்துள்ளனர்.