“தங்கமே... தங்கமே... என்னோட தங்கேமே!” அமெரிக்காவின் ஒலிம்பிக் நம்பிக்கை தலீலா

ஒலிம்பிக் தடகளத்தில் பெண் சிறுத்தையாக தடை தாண்டி, தங்கப்பதக்கத்தை நோக்கி பாயக் காத்திருக்கிறார் தலீலா. பார்க்கலாம் அவரது சாதனைக் களங்களை. தங்கத்தை தட்ட காத்திருக்கும் தலீலா: தடை தாண்டி தங்கம் வெல்ல காத்திருக்கும் பெண் சிறுத்தை 55 கிலோ எடை. 5 அடி 8 அங்குல உயரம். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்காவின் பதக்க நம்பிக்கைகளில் இவரும் ஒருவர். 31 வயது தலீலா முகமது-வின் முந்தைய சாதனைகள் அவர் மீது நம்பிக்கையை விதைக்க வைத்திருக்கிறது. பதக்க அறுவடைக்காக காத்திருக்கிறார் அவர். 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் உலக தடகளப் போட்டியில் பதக்க வேட்டையை தொடங்கினார் தலீலா. அதனைத் தொடர்ந்து 2013- மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். 2019-ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்திலும், 4 பேர் கொண்ட 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்திலும் தங்கப்பதக்கத்தை தன்வசமாக்கினார் தலீலா. இதில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 52.16 நொடிகளில் இலக்கை எட்டி உலக சாதனையை படைத்தார் அவர்.  View this post on Instagram A post shared by Dalilah Muhammad (@dalilahmuhammad_) முந்தைய ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்று சாதித்தார் தலீலா முகமது. பிரிட்டனைச் சேர்ந்த சலீ கன்னலுக்கு பிறகு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன் பட்டங்களுடன், உலக சாதனை நேரத்தையும் படைத்த வீராங்கனையாக இருக்கிறார் தலீலா. இவரது ஓட்டத்தை காண டோக்கியோ காத்திருக்கிறது.

“தங்கமே... தங்கமே... என்னோட தங்கேமே!” அமெரிக்காவின் ஒலிம்பிக் நம்பிக்கை தலீலா

ஒலிம்பிக் தடகளத்தில் பெண் சிறுத்தையாக தடை தாண்டி, தங்கப்பதக்கத்தை நோக்கி பாயக் காத்திருக்கிறார் தலீலா. பார்க்கலாம் அவரது சாதனைக் களங்களை.

தங்கத்தை தட்ட காத்திருக்கும் தலீலா:

தடை தாண்டி தங்கம் வெல்ல காத்திருக்கும் பெண் சிறுத்தை 55 கிலோ எடை. 5 அடி 8 அங்குல உயரம். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்காவின் பதக்க நம்பிக்கைகளில் இவரும் ஒருவர். 31 வயது தலீலா முகமது-வின் முந்தைய சாதனைகள் அவர் மீது நம்பிக்கையை விதைக்க வைத்திருக்கிறது. பதக்க அறுவடைக்காக காத்திருக்கிறார் அவர்.

image

2007-ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் உலக தடகளப் போட்டியில் பதக்க வேட்டையை தொடங்கினார் தலீலா. அதனைத் தொடர்ந்து 2013- மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

2019-ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்திலும், 4 பேர் கொண்ட 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்திலும் தங்கப்பதக்கத்தை தன்வசமாக்கினார் தலீலா. இதில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 52.16 நொடிகளில் இலக்கை எட்டி உலக சாதனையை படைத்தார் அவர். 

முந்தைய ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்று சாதித்தார் தலீலா முகமது. பிரிட்டனைச் சேர்ந்த சலீ கன்னலுக்கு பிறகு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன் பட்டங்களுடன், உலக சாதனை நேரத்தையும் படைத்த வீராங்கனையாக இருக்கிறார் தலீலா. இவரது ஓட்டத்தை காண டோக்கியோ காத்திருக்கிறது.