'இது ஃபவுலே இல்லை' இந்தியாவின் தங்கம் திருடப்பட்டதா? நூலிழையில் மிஸ் ஆன ஸ்ரீசங்கரின் சாதனை

காமன்வெல்த் போட்டியில் பங்குபெற்று விளையாடிய இந்திய தடகள வீரர் ஸ்ரீசங்கர் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். தான் முதன்முதலில் பங்குபெற்ற இந்த காமன்வெல்த் போட்டியிலேயே பதக்கம் வென்று இருப்பது எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதுவே காமன்வெல்த் தடகள போட்டிகளில் அகலம் தாண்டுதல் பிரிவில் ஒரு இந்திய வீரரின் சிறந்த பதக்கமாகும். இதுவரை காமன்வெல்த் போட்டிகளில் தடகளம் அகலம் தாண்டுதல் பிரிவில் வெண்கல பதக்கங்களையே பெற்றிருந்த நிலையில் முதல்முறையாக வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்னும் பெருமையை பெற்றுள்ளார் ஸ்ரீசங்கர். ஸ்ரீசங்கர் 8.36 மீட்டர் அகலம் தாண்டி சாதனை புரிந்து தேசிய சாதனையாளர் என்னும் சிறப்பை தன்வசம் வைத்திருக்கிறார். இதனால் அவர் இந்த காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த தடகள போட்டி தொடங்கியதிலிருந்தே ஸ்ரீசங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தங்கப்பதக்கம் வென்ற பாமாஸ் நாட்டைச்சேர்ந்த லாகுவன் நைர்னிற்கும் ஸ்ரீசங்கர்க்கும் போட்டி வலுவாகவே இருந்தது. இருவரும் சமமான புள்ளிகளுடன் 4ஆம் சுற்றுவரை சென்றனர் 5ஆவது சுற்றில் ஸ்ரீசங்கர் 8.08 மீட்டர் அகலம் தாண்டிய நிலையிலும், 1.7 செ.மீ தூரம் ஃபவுல் செய்யப்பட்டதாக அறிவித்து தங்கப்பதக்கம் நழுவி வெள்ளிபதக்கமே கிடைத்தது. இந்நிலையில், தற்போது ஃபவுல் செய்யப்பட்டதாக கூறப்பட்ட புகைப்படம் என ஒன்றை பதிவிட்டு அதில் ஃபவுல் லைனை ஸ்ரீசங்கர் தொடாத போதிலும் ஃபவுல் கொடுத்துவிட்டதாகவும் இந்தியாவின் தங்கப்பதக்கம் திருடப்பட்டுவிட்டதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

'இது ஃபவுலே இல்லை' இந்தியாவின் தங்கம் திருடப்பட்டதா? நூலிழையில் மிஸ் ஆன ஸ்ரீசங்கரின் சாதனை
Web Designing Company in Coimbatore - Creativepoint

காமன்வெல்த் போட்டியில் பங்குபெற்று விளையாடிய இந்திய தடகள வீரர் ஸ்ரீசங்கர் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். தான் முதன்முதலில் பங்குபெற்ற இந்த காமன்வெல்த் போட்டியிலேயே பதக்கம் வென்று இருப்பது எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதுவே காமன்வெல்த் தடகள போட்டிகளில் அகலம் தாண்டுதல் பிரிவில் ஒரு இந்திய வீரரின் சிறந்த பதக்கமாகும். இதுவரை காமன்வெல்த் போட்டிகளில் தடகளம் அகலம் தாண்டுதல் பிரிவில் வெண்கல பதக்கங்களையே பெற்றிருந்த நிலையில் முதல்முறையாக வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்னும் பெருமையை பெற்றுள்ளார் ஸ்ரீசங்கர்.

image

ஸ்ரீசங்கர் 8.36 மீட்டர் அகலம் தாண்டி சாதனை புரிந்து தேசிய சாதனையாளர் என்னும் சிறப்பை தன்வசம் வைத்திருக்கிறார். இதனால் அவர் இந்த காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த தடகள போட்டி தொடங்கியதிலிருந்தே ஸ்ரீசங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தங்கப்பதக்கம் வென்ற பாமாஸ் நாட்டைச்சேர்ந்த லாகுவன் நைர்னிற்கும் ஸ்ரீசங்கர்க்கும் போட்டி வலுவாகவே இருந்தது. இருவரும் சமமான புள்ளிகளுடன் 4ஆம் சுற்றுவரை சென்றனர் 5ஆவது சுற்றில் ஸ்ரீசங்கர் 8.08 மீட்டர் அகலம் தாண்டிய நிலையிலும், 1.7 செ.மீ தூரம் ஃபவுல் செய்யப்பட்டதாக அறிவித்து தங்கப்பதக்கம் நழுவி வெள்ளிபதக்கமே கிடைத்தது.

image

இந்நிலையில், தற்போது ஃபவுல் செய்யப்பட்டதாக கூறப்பட்ட புகைப்படம் என ஒன்றை பதிவிட்டு அதில் ஃபவுல் லைனை ஸ்ரீசங்கர் தொடாத போதிலும் ஃபவுல் கொடுத்துவிட்டதாகவும் இந்தியாவின் தங்கப்பதக்கம் திருடப்பட்டுவிட்டதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.