மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

கொரோனா கட்டுப்பாடு காரணமாக மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்திலேயே சித்திரை திருவிழா நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா பெருந்தோற்று பாதிப்பின் காரணமாக, வரலாற்றில் முதன்முறையாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் இல்லாமல் கோவில் வளாகங்களிலேயே திருவிழா வைபவங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, மீனாட்சி அம்மன் கோவில் தொடர்பாகவும், திருவிழா தொடர்பாகவும் போலியான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. 

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

கொரோனா கட்டுப்பாடு காரணமாக மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்திலேயே சித்திரை திருவிழா நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா பெருந்தோற்று பாதிப்பின் காரணமாக, வரலாற்றில் முதன்முறையாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் இல்லாமல் கோவில் வளாகங்களிலேயே திருவிழா வைபவங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மீனாட்சி அம்மன் கோவில் தொடர்பாகவும், திருவிழா தொடர்பாகவும் போலியான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.