”கொரோனா பாதிப்பு அதிகரிக்குது; இதை சீக்கிரம் செய்யுங்க” - WHO எச்சரிக்கை

கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் அறிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று மாற்றம் கண்டிருப்பதாகவும் ஆனால் முடிவுக்கு வந்துவிடவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் 110 நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக கூறியுள்ள டெட்ரோஸ் அதானம், இதனால் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கொரோனா அலைகளைத் தடுக்க மக்கள் தொகையைில் குறைந்தபட்சம் 70 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்துமாறு உலக நாடுகளை வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டில் உலகம் முழுவதும் ஆயிரத்து 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் திடீரென அதிகரிக்கும் கொரோனா! இந்தியாவில் நேற்றுடன் ஒப்பிடும்போது கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தின பாதிப்பான 11,793 மற்றும் நேற்றைய பாதிப்பான 14,506-ஐ விட அதிகமாகும். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 13,827 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,04,555 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

”கொரோனா பாதிப்பு அதிகரிக்குது; இதை சீக்கிரம் செய்யுங்க” - WHO எச்சரிக்கை
Web Designing Company in Coimbatore - Creativepoint

கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று மாற்றம் கண்டிருப்பதாகவும் ஆனால் முடிவுக்கு வந்துவிடவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் 110 நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக கூறியுள்ள டெட்ரோஸ் அதானம், இதனால் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

WHO Says Coronavirus Is Not Yet a Pandemic but Urges Countries to Prepare -  Scientific American

கொரோனா அலைகளைத் தடுக்க மக்கள் தொகையைில் குறைந்தபட்சம் 70 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்துமாறு உலக நாடுகளை வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டில் உலகம் முழுவதும் ஆயிரத்து 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார்.

The poor die from COVID while the rich get richer, Oxfam warns |  Coronavirus pandemic News | Al Jazeera

இந்தியாவில் திடீரென அதிகரிக்கும் கொரோனா!

இந்தியாவில் நேற்றுடன் ஒப்பிடும்போது கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தின பாதிப்பான 11,793 மற்றும் நேற்றைய பாதிப்பான 14,506-ஐ விட அதிகமாகும். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 13,827 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,04,555 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.