நாளை முதல் முழுமுடக்கம்: இருசக்கர வாகனங்களிலேயே சொந்த ஊர்களுக்கு திரும்பும் மக்கள்

10 ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரை தமிழகத்தில் 14 நாட்களுக்கு முழு முடக்கம் அமலுக்கு வருவதால், பெரும்பாலானோர் சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்திலேயே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். முழுமுடக்கம் மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற அச்சத்தில் சென்னையில் இருந்து வீடுகளை காலி செய்யும் மக்கள், குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர். பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களிலேயே குடும்பத்துடன் மூட்டை முடிச்சு மற்றும் குழந்தைகளுடன் செல்கின்றனர். அதனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகள் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.   கொரோனா மூன்றாவது அலை உருவாகும் என்கின்ற நிலை வந்தால் 14 நாட்களுக்குப் பிறகு மேலும் ஊரடங்கு கால நீட்டிப்பு செய்யப்படும் என்கின்ற நோக்கத்தில் சென்னையை காலி செய்து கொண்டு அனைவரும் தென் மாவட்டங்களுக்கு படை எடுத்துச் செல்கின்றனர்.

நாளை முதல் முழுமுடக்கம்: இருசக்கர வாகனங்களிலேயே சொந்த ஊர்களுக்கு திரும்பும் மக்கள்

10 ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரை தமிழகத்தில் 14 நாட்களுக்கு முழு முடக்கம் அமலுக்கு வருவதால், பெரும்பாலானோர் சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்திலேயே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

முழுமுடக்கம் மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற அச்சத்தில் சென்னையில் இருந்து வீடுகளை காலி செய்யும் மக்கள், குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர். பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களிலேயே குடும்பத்துடன் மூட்டை முடிச்சு மற்றும் குழந்தைகளுடன் செல்கின்றனர். அதனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகள் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.  

கொரோனா மூன்றாவது அலை உருவாகும் என்கின்ற நிலை வந்தால் 14 நாட்களுக்குப் பிறகு மேலும் ஊரடங்கு கால நீட்டிப்பு செய்யப்படும் என்கின்ற நோக்கத்தில் சென்னையை காலி செய்து கொண்டு அனைவரும் தென் மாவட்டங்களுக்கு படை எடுத்துச் செல்கின்றனர்.