கர்நாடகா: மருத்துவமனையில் இடமில்லாமல் நடைபாதைகளில் உறங்கும் கொரோனா நோயாளிகள்

மருத்துவமனையில் இடமில்லாததால் ‌கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் தெருக்களில் உறங்கும் அவலம் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் முறையான சிகிச்சை பெற முடியாமல் பல்வேறு மாநிலங்களில் மக்கள் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். கர்நாடகா மாநிலம் BIDAR பகுதியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய படுக்கைகள் இல்லை. எனவே நோயாளிகள் மருத்துவமனைக்கு வெளியே நடைபாதைகளிலும் தெரு ஓரங்களிலும் உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே நோய் படுத்தும் பாடு ஒரு புறம் என்றால் இது போன்ற கொடுமைகள் மறுபுறம்.

கர்நாடகா: மருத்துவமனையில் இடமில்லாமல் நடைபாதைகளில் உறங்கும் கொரோனா நோயாளிகள்

மருத்துவமனையில் இடமில்லாததால் ‌கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் தெருக்களில் உறங்கும் அவலம் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் முறையான சிகிச்சை பெற முடியாமல் பல்வேறு மாநிலங்களில் மக்கள் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் BIDAR பகுதியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய படுக்கைகள் இல்லை. எனவே நோயாளிகள் மருத்துவமனைக்கு வெளியே நடைபாதைகளிலும் தெரு ஓரங்களிலும் உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே நோய் படுத்தும் பாடு ஒரு புறம் என்றால் இது போன்ற கொடுமைகள் மறுபுறம்.