தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா 'நெகட்டிவ்'

Telangana governor Tamilisai shares her truth on coronavirus

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா 'நெகட்டிவ்'

‌ஐதராபாத்தில் உள்ள தெலங்கானா ராஜ்பவனில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டது. அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 10 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர்கள் 10 பேரும் மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில்,ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு 'நெகட்டிவ்' என உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்தத் தகவலை தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், தமிழிசை சவுந்தரராஜனின் கணவர், மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு 'நெகட்டிவ்' என முடிவுகள் வந்துள்ளது.

 

 

Source: http://www.puthiyathalaimurai.com/newsview/73720/Telangana-governor-Tamilisai-shares-her-truth-on-coronavirus