கோவை: செயின் பறித்தவரை தைரியமாக மடக்கிப்பிடித்த மூதாட்டிக்கு பாராட்டு

செயின் பறிப்பு திருடனை தைரியமாக மடக்கிப்பிடித்த 62 வயது மூதாட்டிக்கு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியதோடு, ஊக்கத்தொகையும் வழங்கி கௌரவித்தார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமாத்தாள், பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த‌ நபர், ராமாத்தாளின் தங்க நகையைப் பறித்துக்கொண்டு தப்ப முயன்றார். உடனே, இருசக்கர வாகனத்தை நகர விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சப்தம் எழுப்பினார் ராமாத்தாள். அதைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, செயின் பறித்த நபரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். துணிச்சலுடன் செயல்பட்டு திருடனைப் பிடித்துக்கொடுத்ததால், ராமாத்தாள் பாட்டி கெளரவி‌‌‌‌க்கப்பட்டார்.

கோவை: செயின் பறித்தவரை தைரியமாக மடக்கிப்பிடித்த மூதாட்டிக்கு பாராட்டு

செயின் பறிப்பு திருடனை தைரியமாக மடக்கிப்பிடித்த 62 வயது மூதாட்டிக்கு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியதோடு, ஊக்கத்தொகையும் வழங்கி கௌரவித்தார்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமாத்தாள், பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த‌ நபர், ராமாத்தாளின் தங்க நகையைப் பறித்துக்கொண்டு தப்ப முயன்றார். உடனே, இருசக்கர வாகனத்தை நகர விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சப்தம் எழுப்பினார் ராமாத்தாள்.

அதைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, செயின் பறித்த நபரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். துணிச்சலுடன் செயல்பட்டு திருடனைப் பிடித்துக்கொடுத்ததால், ராமாத்தாள் பாட்டி கெளரவி‌‌‌‌க்கப்பட்டார்.