"என் மனைவி இறந்துவிடுவார்" - டெல்லியில் கொரோனா மருத்துவனை முன்பு கதறிய கணவர்!

டெல்லியில் உள்ள பல மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு இடமில்லை என்று கூறியதால், “என் மனைவி இறந்துவிடுவார்” என்று கூறி மருத்துவமனை முன்பு கணவர் அழுத காட்சிகள் அனைவரின் நெஞ்சையும் உறைய வைத்திருக்கிறது. டெல்லியில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும்சூழலில், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், தடுப்பூசிகள் மற்றும் படுக்கை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று அரசாங்கம் பலமுறை உத்தரவாதம் அளித்துவருவது மக்களுக்கு கொஞ்சம் நிவாரணம் அளித்துள்ளது. ஆனாலும் இன்று டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்களின் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், பல நோயாளிகள் சிகிச்சை பெற காத்திருக்கின்றனர். டெல்லியில் அனைத்து மருத்துவமனை படுக்கைகளும் நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் கூறியதால், பலரும் வேதனையுடன் காத்துகிடக்கின்றனர். இந்த கூட்டத்தில் அஸ்லம் கான் என்ற 30 வயது நபர், ‘எனது மனைவிக்கு சிகிச்சை பெறுவதற்காக, இரு சக்கர வாகனத்தில் அவரை அழைத்துக்கொண்டு நகரில் மூன்று மருத்துவமனைகளுக்கு சென்றும் இடம் கிடைக்கவில்லை’ என்று கூறி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனை ஊழியர்களிடம் கெஞ்சினார். அவர் பேசுகையில் " உடனடியாக சிகிச்சையளிக்காவிட்டால் என் மனைவி இறந்துவிடுவார், தயவுசெய்து அவளை சிகிச்சைக்கு அனுமதிக்கவும். நான் உங்களின் கால்களைத் விழக்கூடத் தயாராக இருக்கிறேன். 'படுக்கை இல்லை' என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். நான் அவளை எப்படி இறக்க விட முடியும்?" என்று கூறிய அவரால் அழுகையை நிறுத்த முடியவில்லை. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசின் உதவியை நாடிய பின்னர், டெல்லியில் ஆக்ஸிஜன் நெருக்கடி குறித்து உத்தரவிட்ட  உயர்நீதிமன்றம், "பிச்சை எடுக்கவும், கடன் வாங்கவும், திருடவும் ... இது உங்கள் வேலை. ஆனால் மக்களுக்கு ஆக்சிஜனை கொடுக்கவும்" என்று குறிப்பிட்டது.

டெல்லியில் உள்ள பல மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு இடமில்லை என்று கூறியதால், “என் மனைவி இறந்துவிடுவார்” என்று கூறி மருத்துவமனை முன்பு கணவர் அழுத காட்சிகள் அனைவரின் நெஞ்சையும் உறைய வைத்திருக்கிறது.

டெல்லியில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும்சூழலில், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், தடுப்பூசிகள் மற்றும் படுக்கை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று அரசாங்கம் பலமுறை உத்தரவாதம் அளித்துவருவது மக்களுக்கு கொஞ்சம் நிவாரணம் அளித்துள்ளது.

ஆனாலும் இன்று டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்களின் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், பல நோயாளிகள் சிகிச்சை பெற காத்திருக்கின்றனர். டெல்லியில் அனைத்து மருத்துவமனை படுக்கைகளும் நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் கூறியதால், பலரும் வேதனையுடன் காத்துகிடக்கின்றனர்.

image

இந்த கூட்டத்தில் அஸ்லம் கான் என்ற 30 வயது நபர், ‘எனது மனைவிக்கு சிகிச்சை பெறுவதற்காக, இரு சக்கர வாகனத்தில் அவரை அழைத்துக்கொண்டு நகரில் மூன்று மருத்துவமனைகளுக்கு சென்றும் இடம் கிடைக்கவில்லை’ என்று கூறி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனை ஊழியர்களிடம் கெஞ்சினார்.

அவர் பேசுகையில் " உடனடியாக சிகிச்சையளிக்காவிட்டால் என் மனைவி இறந்துவிடுவார், தயவுசெய்து அவளை சிகிச்சைக்கு அனுமதிக்கவும். நான் உங்களின் கால்களைத் விழக்கூடத் தயாராக இருக்கிறேன். 'படுக்கை இல்லை' என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். நான் அவளை எப்படி இறக்க விட முடியும்?" என்று கூறிய அவரால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசின் உதவியை நாடிய பின்னர், டெல்லியில் ஆக்ஸிஜன் நெருக்கடி குறித்து உத்தரவிட்ட  உயர்நீதிமன்றம், "பிச்சை எடுக்கவும், கடன் வாங்கவும், திருடவும் ... இது உங்கள் வேலை. ஆனால் மக்களுக்கு ஆக்சிஜனை கொடுக்கவும்" என்று குறிப்பிட்டது.