இன்னும் இரண்டே புள்ளிகள்தான்! பாபர் அசாமை பின்னுக்கு தள்ளுவாரா சூர்யகுமார் யாதவ்?

ஐசிசி தற்போது வெளியிட்டுள்ள டி20 கிரிக்கெட் ஆடவர் தரவரிசை பட்டியலில் 818 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியின் கேப்டனை விரைவில் பின்னுக்கும் தள்ளும் விதமாக 816 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடததை பிடித்துள்ளார் நம் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ். டி20 கிரிக்கெட் ஆடவர்களுக்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் நான்காவது இடத்தில் இருந்த இந்திய அணியை சேர்ந்த சூர்யகுமார் யாதவ் நடந்து கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகளுடனான போட்டிகளில் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து தற்போது மூன்று இடங்கள் முன்னேறி தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இது இதுவரை இந்திய பேட்ஸ்மேன்கள் பிடித்த அதிக புள்ளிகள் வரிசையில் இது மூன்றாவது அதிகபட்ச புள்ளியாகும். கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலியை தொடர்ந்து தற்போது சூர்யகுமார் யாதவ் இந்த இடத்தை பிடித்துள்ளார். 31 வயதான இவர் நடந்து முடிந்த இங்கிலாந்து உடனான டி20 தொடரில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்தார். அதில் 111 ரன்கள் அடித்த அவர் 168 ஸ்டிரைக் ரேட்டில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை கதறவிட்டார். தொடர்ந்து நல்ல பார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் நடந்து கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவும் தனது அரைசதத்தை பதிவு செய்தார். இதனால் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஓபன் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டு தற்போது விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஓபன் செய்து வருகிறார். விரைவில் ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரிலும் அவர் ஓபன் செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் இடம் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி ஓடிஐ மற்றும் டி20 தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். இந்நிலையில், பாபர் அசாமை பின்னுக்குத்தள்ள இன்னும் 2 புள்ளிகளே வித்தியாசம் உள்ளதால் சூர்யகுமார் யாதவ் விரைவில் பாபர் அசாமை பின்னுக்குத்தள்ளுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

இன்னும் இரண்டே புள்ளிகள்தான்! பாபர் அசாமை பின்னுக்கு தள்ளுவாரா சூர்யகுமார் யாதவ்?
Web Designing Company in Coimbatore - Creativepoint

ஐசிசி தற்போது வெளியிட்டுள்ள டி20 கிரிக்கெட் ஆடவர் தரவரிசை பட்டியலில் 818 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியின் கேப்டனை விரைவில் பின்னுக்கும் தள்ளும் விதமாக 816 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடததை பிடித்துள்ளார் நம் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ்.

டி20 கிரிக்கெட் ஆடவர்களுக்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் நான்காவது இடத்தில் இருந்த இந்திய அணியை சேர்ந்த சூர்யகுமார் யாதவ் நடந்து கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகளுடனான போட்டிகளில் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து தற்போது மூன்று இடங்கள் முன்னேறி தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இது இதுவரை இந்திய பேட்ஸ்மேன்கள் பிடித்த அதிக புள்ளிகள் வரிசையில் இது மூன்றாவது அதிகபட்ச புள்ளியாகும். கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலியை தொடர்ந்து தற்போது சூர்யகுமார் யாதவ் இந்த இடத்தை பிடித்துள்ளார்.

31 வயதான இவர் நடந்து முடிந்த இங்கிலாந்து உடனான டி20 தொடரில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்தார். அதில் 111 ரன்கள் அடித்த அவர் 168 ஸ்டிரைக் ரேட்டில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை கதறவிட்டார். தொடர்ந்து நல்ல பார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் நடந்து கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவும் தனது அரைசதத்தை பதிவு செய்தார்.

image

இதனால் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஓபன் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டு தற்போது விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஓபன் செய்து வருகிறார். விரைவில் ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரிலும் அவர் ஓபன் செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் இடம் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி ஓடிஐ மற்றும் டி20 தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். இந்நிலையில், பாபர் அசாமை பின்னுக்குத்தள்ள இன்னும் 2 புள்ளிகளே வித்தியாசம் உள்ளதால் சூர்யகுமார் யாதவ் விரைவில் பாபர் அசாமை பின்னுக்குத்தள்ளுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.